மாணவியின் கல்வி தடை பட காரணம் விஜய் ரசிகர் மன்றம் அதிரடி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி தான் மேற்படிப்பை தொடர விஜய் ரசிகர் மன்றம் உறுதி அளித்து தற்போது அவர்கள் உதவாததால் படிப்பை பாதியில் நிற்பதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது விஜய் ரசிகர் மன்றம் இதற்கு தகுந்த விளக்கம் அளித்துள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி இந்த வாக்குறுதியை அளித்து இருந்ததாகவும் பின்னர் அவர் விஜய் ரசிகர் மன்ற பதவியில்  இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

இதனால் தற்போது விஜய் ரசிகர் மன்றத்திற்கு இந்த விஷயம் தெரியாமல் போனது. தற்போது அந்த மாணவியின் படிப்பை தொடர உதவ தாயராக உள்ளதாக தெரிவித்து உள்ளனர் அரியலூர் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*